ரவிக்குமாரா? விஸ்ணுவர்தனா? வெங்கட்பிரபுவா? யார் இயக்க போவது "தல" யின் வரலாறு சொல்லப்போகும் அட்டகாசமான ஐம்பதாவது படத்தை என்ற கேள்விதான் தல ரசிகர்கள் மத்தியில் சமீப காலமாய் பேசப்பட்டு வந்தது. பலதரப்பட்ட வதந்திகள், யூகங்களுக்கு பின் இதோ ஒரு அமர்க்களமான செய்தி.
அல்டிமேட் ஸ்டாரின் பொன் விழா படம் ஒரு பிரம்மாண்ட கூட்டணியின் படமாய் வரப்போகிறது.
- படத்தை இயக்க போவது நாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த இயக்குனர் "கௌதம் மேனன்".
- ஆசை நாயகனின் அடுத்த படத்துக்கு இசை 'ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் A.R. ரஹ்மான்.
- படத்தை தயாரிக்க போவது தயாநிதி அழகிரியின் Cloud Nine நிறுவனம்.
அஜித்- கௌதம் மேனன் - A.R. ரஹ்மான் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகப்போகும் தல யின் ஐம்பதாவது படம் 2010 இல் மிகப்பெரிய வெற்றிப்படமாய் அமையப்போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.. நாயகி மற்றும் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும்.
இந்த செய்தி குறித்த மற்ற சுட்டிகள்:
http://www.ajithfans.com/news/2009/12/12/breaking-news-on-50th-film-afcom-exclusive/
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14923452
http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/12/14-goutham-menon-direct-ajith-s-50th-film.html



2 comments:
காத்திருப்போம்.
சூப்பர்...!
மதுரைல கட்டாயம் 300 நாள் ஓடும்.
சும்மா அதிருதுல்ல.
Post a Comment