வேற்று மொழிப்படங்கள் எவ்வளவு பெரிய ஹிட் அடித்தாலும் அதை தமிழுக்கு ரீமேக் செய்யும் போது,தமிழ்த்திரையுலகின் ரசிகர்கர்களுக்கு அஜித்தான் முதல் சாய்ஸ். எந்த ஒரு சூப்பர் டூப்பர் படத்தை ரீமேக் செய்யும் போதும் தலதான் அந்த படத்தின் ஹீரோவென தானாக கிசுகிசு கிளம்பிவிடும். தமிழும் கூட விதிவிலக்கல்ல. காக்ககாக்க, கஜினி, நியூ, நான் கடவுள் அவ்வளவு ஏன்..? தமிழின் ஹாலிவுட் அடையாளமாக எடுத்துக் கொண்டிருக்கும் "எந்திரன்" படத்தில் கூட தல அவர்களின் பெயர் அடிபட்டு, ஸ்டில்ஸ் வெளியானது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இப்போது அடிபட்டு கொண்டிருப்பது இப்போது தெலுங்கின் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தேஜாவும், காஜல் அகர்வாலும் நடித்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் "மஹாதீரா" படம். இந்த படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணமாக. "வி கிரியேஷன்ஸ், கலைப்புலி தாணு அவர்கள் மஹாதீராபடத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்துள்ளார்" என்பதைக் கூறுகின்றனர்.அந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் சொல்கின்றனர்.ஆனால் மறுபுறம் சிரஞ்சீவியே தமிழில் ரீமேக் செய்து தன் மகனை தமிழில் அறிமுகப்படுத்தக் கூடும் என்கின்றனர்.

சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிக்க,சரண் அவர்களின் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படமான "அசல்" படப்பிடிப்பு நடந்து வந்தாலும், அசலுக்குப் பிறகு அஜித் நடிக்கப் போவது அவரின் ஐம்பதாவது படம். அதனால்தான் தல ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த், வெங்கட் பிரபு, தரணி என இருப்பார்களெனவும் செய்தி உலா வருகின்றது.
மஹாதீரா படத்தில் கதாநாயகனுக்கு, ஒரு துடிப்பான இளைஞன் மற்றும் பிற்பாதியில் ஒரு ராஜா போன்ற சரித்தர கால வேடமென்பதாலும் அது அஜித் அவர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வியும் எழுகின்றது. பொருந்தும் கேரக்டரில் நடிப்பவன் நடிகனில்லை. எந்த கேரக்டரையும் தனக்கு பொருத்தி நடிப்பவனே நடிகன். சரிதானே.! பி.வாசு அவர்களின்
பரமசிவன் படத்தில் உடலை இளைத்திருந்தார் அஜித். ஒரு வேளை மஹாதீராவின் தமிழ் வெர்ஷனில் நடிக்க நேர்ந்தால்,மற்றுமொருமுறை உடலை இளைக்க தயங்கமாட்டார். சரித்தர கால வேடம் பொருந்துமா என்றால் ஷாரூக்கானோடு இணைந்து நடித்த "சாம்ராட் அசோகா" படத்தில் சரித்தர வேடத்தில்தான் நடித்திருப்பார் அஜித்.ஆக, மஹாதீரா படத்தில்
நிச்சயம் நடித்தால் நன்றாகவே இருக்கும்.ஆனால் உண்மை தெரிய,ரசிகர்களாகிய நாம் கொஞ்சம் பொருத்திருக்க வேண்டுமே..!